Thursday, 27 April 2017

JEE MAIN தேர்வு முடிவுகள் வெளியாகின !

JEE Main 2017 - CBSE has declared the JEE Main result 2017 on April 27, 2017 for Paper 1 along with the Score and All India Rank (AIR) of candidates. The Central Board of Secondary Education (CBSE) had conducted JEE Main 2017 on April 2 (offline) and April 8 & 9 (online). JEE Main 2017 is the largest undergraduate engineering entrance test in the country for admissions to the UG engineering / architecture courses at  the NITs, IIITs and GFTIs. After the result and JEE main cutoff is declared, candidates can know if they are amongst the 2,20,000 top candidates of JEE Main who will be eligible to appear for JEE Advanced.  JEE Main 2017 result for paper 2 will be announced on May 27. The JEE Main Official Answer Key 2017 was available from April 18 along with the recorded responses of the candidates. This year, Class XII marks will not be considered while computing the JEE Main ranks. However as per the new eligibility criteria, candidates will now require a minimum of 75% in their Class XII (65% for SC/ST) or be in the top 20 percentile of their states to be eligible for the admissions to the NITs, GFTIs and the IIITs which are participating in the common counselling through JoSAA. Check the full article to know more about the admit card, exam pattern, result, counselling and more of JEE Main 2017.


Salient Features of JEE Main 2017


Features
Specifications
Exam Name
Joint Entrance Examination (JEE) Main 2017
Conducting Authority
Central Board of Secondary Education (CBSE)
Exam Level
National Level
Category of Examination
Undergraduate (UG)
Mode of Exam
Online and Offline
Duration of Examination
3 hours
Paper I
B.Tech / B.E.
Paper II
B.Arch / B.Planning
Announcement of Official Notification
November 18, 2016
Number of JEE Main 2017 applicants
1,198,989
Purpose of Examination
Qualifying examination for admissions into NITs, IIITs and GFTI.
Qualifying Test for JEE Advanced which provides admissions into IITs.
Type of Questions
Multiple Choice Questions (MCQ)
Total Marks
360
Total Number of Questions in Paper
90 Questions (30 Questions each in Physics, Chemistry and Mathematics)
Marking Scheme
4 marks will be allotted for each correct response.
For each incorrect response, 1 mark will be deducted.
JEE Main Exam
April 2 (Offiline) and April 8 & 9, 2017 (Online)
JEE Main Offcial Answer Key 
April 18, 2017
JEE Main Result & Rank List
April 27, 2017
Selection Process
Admission through JoSAA counselling on the basis of the applicants All India Rank
How to check JEE Main Result 2017 
  • Test takers have to Click on the link here to get access to the JEE Main 2017 Result portal
  • Now they need to enter their roll number and date of birth
  • Now, click on submit button and you will have JEE Main result 2017 in front of you
  • Check yoour score and ranks and download the Rank Card of JEE Main 2017 
  • Candidates will also get to know their qualifying status for JEE Advanced 2017
Number of Students appearing in JEE Main 2017
S.No
Particulars
Number of Applicants
1
Total number of candidates appearing in offline mode of JEE Main 2017
10,15349
2
Total number of candidates registered for online mode of exam
1,83,640
3
Male applicants registered for both modes of the exam
8,62,526
4
Female applicants registered for both modes of the exam
3,36,460
5
Transgender applicants registered for both modes of the exam
3
 6
Total number of applicants registered for JEE Main 2017
1,198,989

JEE Main Rank List 2017


The rank list of JEE Main 2017 has been released by the Joint Admission Board (JAB) on April 27 along with the result. The All India Ranks of the applicants has been announced through the rank list. The normalised scores of 12th standard examination will not be counted anymore for the decision of the ranking. The JEE Main Rank List 2017 will display the All India rank of the candidate along with the All India Category rank. The All India Rank will be used by JoSAA for admissions while the other ranks are for information only.

JEE Main Cutoff 2017


The cutoff of JEE Main 2017 has been announced by CBSE on April 27 along with the result. The cutoff of JEE Main consists of the closing ranks or minimum scores that all applicants will have to obtain to be eligible for JEE Advanced 2017. Candidates who dont meet the cutoff will not be eligible to appear for JEE Advanced. However they can participate in the counselling of JEE Main that will be held through JoSAA in June.

JEE Main 2017 Cutoff
S.No.
Category
Cut off
1
General
81
2
OBC-NCL
49
3
SC
32
4
ST
27
5
PWD
1
Previous year JEE Main Cutoff 
S.No
Category
Cut-Off Score
1
General Category
100
2
OBC-NCL
70
3
Scheduled Caste
52
4
Scheduled Tribe
48
Top 10 NIT Colleges Cutoff 2016
S.No
Name of NIT College
Opening Rank 
Closing Rank
1
NIT Calicut
11
28679
2
NIT Durgapur
69
45159
3
NIT Kurukshetra
35
29806
4
NIT Raipur
26
90465
5
NIT Rourkela
15
71467
6
NIT Surathkal
4
32588
7
NIT Srinagar
74
252451
8
NIT Tiruchirappalli
57
26489
9
NIT Uttarakhand
264
56366
10
NIT Warangal
5
29270
Top 5 IIIT Colleges Cutoff 2016
S.No
Name of IIIT College
Opening Rank 
Closing Rank
1
IIIT, Allahabad
70
16198
2
IIIT, Guwahati
1396
27928
3
IIIT, Gwalior
89
17860
4
IIIT, Jabalpur
168
25501
5
IIIT, Kancheepuram
142
30344
Top 3 GFTI Colleges Cutoff 2016
S.No
Name of GFTI College
Opening Rank 
Closing Rank
1
BITS Mesra
31
51314
2
GKV Haridwar
116
50951
3
IT-GGU Bilaspur
360
53965

JEE Main Participating Institutes 2017


JEE Main 2017 acts as a gateway for applicants into the various prestigious engineering institutes of India. The participating institutes of JEE Main 2017 includes 31 National Institutes of Technology (NITs), 20 Indian Institutes of Information Technology (IIITs) and 19 Government Funded Technical Institutions (GFTIs). Some of the states like Haryana, Nagaland, Uttarakhand, Gujarat, Madhya Pradesh and Odisha also offer admissions to undergraduate engineering aspirants in their respective colleges on the basis of JEE Main 2017 scores. Some of the reputed private engineering colleges also offer admission based on the JEE scores.

JEE Main Counselling 2017


The counselling session of JEE Main 2017 is conducted by Joint Seat Allocation  Authority (JoSAA). Only those candidates who have qualified in JEE Main 2017 will be able to participate in the counselling session. JEE main qualified candidates will have to register themselves and select their preferred college and course. Online allocation of seats will be done based on the applicant’s All India Rank in JEE Main, category, availability of seats and other factors. After the seat allocation is done, the applicants will have to report at their allotted institute for document verification and fee payment. JoSAA conducts 6 rounds of counselling and the applicants will be allotted into NITs, IIITs and GFTIs.

Documents to be Submitted during Verification;
  • 3 Passport size Photographs
  • JEE Main Admit Card 2017
  • JEE Main Result 2017
  • Proof of Date of Birth
  • Seat Allotment letter
  • Photo Identity Card
  • Proof of Seat Acceptance Fee Payment
  • 12th standard Mark Sheet
  • Category Certificate (if applicable) 

Tuesday, 21 March 2017

TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!

Image result for tips for tnpsc examதமிழ்நாட்டின் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வோர் ஆண்டும் பலகட்டமாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் மூலம் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற பலரது கனவை நனவாக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரிய வாய்ப்பளிக்கிறது. அதிகாரி பணி முதல் அட்டண்டர் பணி வரை உள்ள பல்வேறு பணியிடங்களும் இந்தத் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அரசுப் பணியில் சேரலாம்.
அதற்குத் தேவையான பாடத்திட்டங்கள், கேள்வி கேட்கும் முறைகளைப் பற்றிய விளக்கங்களையும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். கடந்த இதழில் புவியியல் பாடத்தில் காற்று பற்றியும் அதன் வகைகளையும், மழைப்பொழிவையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களை இனி பார்ப்போம்…
வள ஆதாரங்கள்
மனிதனுக்குப் பயனளிக்கும் பொருட்கள் வள ஆதாரங்கள் என்று அழைக்கப்படுகிகின்றன. அவை அனைத்தையும் நாம் நிலக்கோளம், நீர்க்கோளம் மற்றும் புவிக்கோளத்தின் மூலம் பெறுகின்றோம். வள ஆதாரங்கள்தான் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வள ஆதாரங்களை அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.      
                                         
இயலா ஆற்றல் வள ஆதாரங்கள்: மக்களால் பயன்படுத்த முடியாத வளங்கள். (எ.கா,) அண்டார்டிகாவில் உள்ள வளங்கள். புதுப்பிக்க இயலாத வள ஆதாரங்கள்: தீர்ந்து போகக்கூடிய வளங்கள். (எ.கா.) கனிம வளம். புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்கள்: தீர்ந்து போகாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்கள். (எ.கா.) நீர், சூரிய ஆற்றல். வளர்ச்சியுற்ற வள ஆதாரங்கள்: மக்களால் பயன்படுத்தக்கூடிய வளங்கள். (எ.கா.) அனைத்து வகைகளிலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய வளங்கள்.
புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்கள்
நீர்மின் சக்தி: சீனாவின் ‘யாங்சி’ ஆற்றின் குறுக்கே உள்ள முப்பள்ளத்தாக்கு அணையில் உலகின் மிகப்பெரும் நீர்மின்சக்தி நிலையம் உள்ளது. இந்தியாவில் பெரியது & பக்ராநங்கல்.
சூரிய ஆற்றல்: ஒளியின் வோல்டா மின்கலம் சூரியசக்தியை சேமிக்கப் பயன்படுகிறது. ஜெர்மனி உலகிலேயே அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
காற்று ஆற்றல்: தமிழகத்தின் ஆரல்வாய்மொழியில் உலகின் மிகப்பெரிய காற்றாலை நிறுவனம் உள்ளது. மகாராஷ்டிரமும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கிறது.
உயிரி ஆற்றல்: மரங்கள், பயிர்கள், வேளாண்மை மற்றும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்கள் உயிரி ஆற்றலுக்கு முக்கிய ஆதாரம் ஆகும்.
நிலக்கரி - புதை எரிபொருள் என அழைக்கப்படுகிறது
எண்ணெய் - இந்தியாவின் முக்கிய எண்ணெய் வயல்கள் அஸ்ஸாமில் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல் மும்பை. நினைவில் கொள்கநமது மாநிலத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி. யுரேனியம், தோரியம் ஆகியவை அணுசக்தி  கனிமங்கள்.
இந்தியாவில் தமிழ்நாடு,  கேரளா கடற்கரை மணற்பரப்புகளில் அதிக அளவு காணப்படுகிறது - இல்மனைட். மாட்டுச் சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருள்  மீத்தேன்வள ஆதாரங்களுக்கு அடுத்தபடியாக நாம் தொழில்கள் பற்றிப்பார்ப்போம். இதுவும் புவியியல் பாடத்திட்டத்துக்குள் வரக்கூடிய பகுதி என்பது கவனத்தில்கொள்க.
தொழில்கள்
முதல்நிலைத் தொழில்கள்: சிவப்புக் கழுத்துப் பட்டை  பணியாளர்கள் இயற்கையோடு இணைந்த பழமையான தொழில் நடவடிக்கை. (எ.கா.) வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், உணவு சேகரித்தல், கனிமங்கள் வெட்டியெடுத்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் மற்றும் விவசாயம்.      
இரண்டாம்நிலைத் தொழில்கள்: நீலக்கழுத்துப் பட்டை - பணியாளர்கள் மூலப்பொருட்களை முடிவுற்ற பொருளாக மாற்றுவது. (எ.கா.) கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை.
மூன்றாம்நிலைத் தொழில்கள்: வெளிர் சிவப்புக்கழுத்துப்பட்டை - பணியாளர்கள் வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புச் சேவைகள். தொழில் நுட்பத்தில் சிறப்புமிக்க பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள்.         
                   
நான்காம்நிலைத் தொழில்கள்: வெள்ளைக்கழுத்துப் பட்டை - பணியாளர்கள் கல்வித்துறை, நீதித்துறை, மருத்துவம், பொழுதுபோக்கு, கேளிக்கைள், நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் தன்மை பணிகள்.            
                              
ஐந்தாம்நிலைத் தொழில்கள்: தங்கக் கழுத்துப் பட்டை - பணியாளர்கள் ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டம் வகுப்போர் போன்ற உயர்நிலைப் பணியாளர்கள். மேலே குறிப்பிட்டுள்ள தொழில்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த மேலும் பல தகவல்களை அடுத்த இதழில்  பார்ப்போம்.




10வது படிப்புக்கு விமான ஆணையத்தில் வேலை

Image result for job in aeroplaneநிறுவனம்: 

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (சென்னை)

வேலை: 

ஜூனியர் அசிஸ்டென்ட்(ஃபையர் சர்வீஸ்)

காலியிடங்கள்: 

147

கல்வித்தகுதி: 

10வது படிப்புடன் 3 ஆண்டு ரெகுலர் டிப்ளமோ(மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபையர்) (அ) +2 படிப்புடன் கனரக வாகன உரிமம் தேவை.

வயது வரம்பு: 

18-30. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு

தேர்வு முறை: 

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 

21.3.17

மேலதிக தகவல்களுக்கு:http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp

எஞ்சினியரிங் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்!


Image result for engineering studentsமாணவர்களின் மகத்தான சாதனை!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய குருஷேத்ரா எனும் அமைப்பு, அறிவியல் கண்காட்சி ஒன்றைச் சமீபத்தில் நடத்தியது.அதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முற்றிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 12 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தபட்டன. அக்கண்காட்சியில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த சில கண்டுபிடிப்புகளைக் கடந்த இதழில் பார்த்தோம். அந்த வகையில் இன்னும் சில கண்டுபிடிப்புகளை இப்போது பார்ப்போம்…

பார்வையற்றோருக்குப் படித்துக்காட்ட ஒரு கருவிபார்வையற்றோர்களின் கண்முன் இருக்கும் எழுத்துகளை வாசித்து ஆடியோவாக்கி அவர்களுக்கு கூறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது ப்ளைண்ட் கைடன்ஸ் என்ற கருவி.

இதை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் படிக்கும் சரிகா, கௌதமி, கிருத்திகா, சுச்சரிதா மற்றும் மூன்றாமாண்டு ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் எஞ்சினியரிங் படிக்கும் நந்திதா ஆகிய ஐந்து மாணவிகள் இணைந்து உருவாக்கியிருந்தனர்.

மாணவிகள் தங்கள் கருவியின் சிறப்புகளைக் கூறும்போது,”பொதுவா கண் தெரியாதவங்க தங்களைச் சுற்றி நடப்பதை சத்தத்தை வச்சு தெரிஞ்சுகிறாங்க. ஆனா, அவங்களுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் எழுத்துகள்தான். உதாரணமா, பஸ் வர்றது சத்தம் மூலமா அவங்களுக்குத்  தெரியும். ஆனா, அது எந்த இடத்துக்கான பஸ்ஸுனு  தெரியாது. இத மாத்தணும்னு நெனச்சோம். இத மையமா வச்சுதான் ப்ராஜக்ட் பண்ணணும்னு முடிவு எடுத்து முடிச்சும் காட்டியிருக்கோம்” என்றனர்.

மேலும் அவர்கள், “சாதாரண தொப்பியில ஒரு கேமரா, அத ஆன் பண்றதுக்கு ஒரு ஸ்விட்ச்.டெஸ்ஸராக்ட்னு கம்ப்யூட்டர் ப்ரொக்ராம் ஒன்று, மைக்ரோபிராசசர் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கியிருக்கிறோம். கண் தெரியாதவர்கள் தொப்பியை மாட்டியவுடன் அந்த ஸ்விட்சை ஆன் செய்தால், கேமரா அவங்க முன்னாடி இருக்குற எழுத்துகளை போட்டோ எடுக்கும்.

எடுத்த போட்டோவிலிருந்து எழுத்த பிரிச்சு எடுத்து, அதனோட அர்த்தத்தை ஆராய டெஸ்ஸராக்ட் ப்ரோகிராம் உதவும். இப்போ அந்த எழுத்துக்கான அர்த்தம் கிடச்சுடுச்சு. அந்த அர்த்தத்தை வாய்சாக மாற்றுவதற்கு ஈ ஸ்டீக்னு ஒரு சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து இருக்கிறோம்.

இப்போது கிடைத்த அந்த எழுத்துக்கான வாய்சை  அவருக்கு தெரிவிக்கும் வகையில் கேமராவுடன் ஒரு ஹெட் போன் பொருத்தியிருக்கோம். இதன் மூலம் கண் தெரியாதவர்கள் தங்கள் முன் இருக்கும் எழுத்துகளை ஆடியோவாக்கி தெரிஞ்சுக்கலாம்” என்று பெருமிதம் பொங்க கூறினர்.

சேஃப்ட்டி டிராவல் பேக்!

மூன்றாமாண்டு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கும் டேனிஸ் அஹமது, ஜாகிர் அப்பாஸ், ரோகித் ஆகிய மூன்று மாணவர்கள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பேக் ஒன்றை வடிவமைத்திருந்தனர்.டிராவல் பேக் திருட்டுப் போவது, பேக்கில் பிளேடு போடுவது, பேக்கை மறந்து வைத்துவிடுவது மற்றும் ஏர்போர்ட்டில் பேகை மாற்றி எடுத்துச் செல்லுதல் போன்ற சூழ்நிலைகளில், தங்கள் டிராவல் பேகுகளை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் படைப்பின் சிறப்பைக் கூறும்போது, “ஒரு மெயின் போர்டில் சிம் கார்டு போல இருக்கும் ஜி.எஸ்.எம். கார்டு, ப்ரொடக்டிவ் வயர், சென்சார் போர்டு போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளோம். உங்கள் டிராவல் பேக் தொலைந்தாலோ அல்லது திருட்டுப்  போனாலோ, அந்த பேகில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டு போன்று இருக்கும் ஜி.எஸ்.எம். மாடியுலின் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

அந்த பேக் இப்போது எங்கே இருக்கிறது என நம் மொபைலுக்கு மெஸேஜ் வந்துவிடும். இதேபோல் பேகின் உட்புறம், எலக்ட்ரிக் வயர் போன்ற ப்ரொடெக்டிவ் மெஸ் ஒன்று சுற்றப்பட்டு சென்சார் போர்டும் இணைக்கப்பட்டிருக்கும். இதன் உதவியால் பேகில் பிளேடு  போடும்போது  அலாரம் அடிக்கும்.மேலும் இதில் பாஸ்வேர்டை கூட போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் முக்கியப் பொருட்களை வைத்து எடுத்துச் செல்லும் பேக்கானது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்” எனக் கூறினர்.

மாயக் கண்ணாடிநேரம், செய்திகள், வெதர் ரிப்போர்ட், காலண்டர், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பதிவுகள் மெயில் போன்றவற்றை செல்போனில் பார்ப்பது சாதாரண விஷயம். ஆனால், இதைக் கண்ணாடியிலேயே பார்க்கும் ஒரு கண்டுபிடிப்பை அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்கள் நிகில், கீர்த்தனா, பீப்தி, ஆகாஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இக்காண்ணாடியைப் பற்றி ஆகாஷ் கூறுகையில், “காலையில் எழுந்ததும் நாம் முதல்ல கண்ணாடி முகத்துலதான்  முழிக்கிறோம்.

அப்படி கண்ணாடியைப் பாக்கும்போதே முகம் தெரியவும் மற்றும் அதே சமயத்தில்  கண்ணாடியில் நம் செல்போனில் வந்திருக்கும் செய்திகள் தெரிவதற்கும் 2 (2 way mirror) வழிக் கண்ணாடியைப் பயன்படுத்தியிருக்கோம்.

இதனால் செய்திகள் இக்கண்ணாடியின் உள் திரையிலும், உங்களின் முகம் வெளித் திரையிலும் தோன்றும். மேலும்  செய்திகள் ,நேரம், வெதர், நினைவூட்டல் ஆகியவற்றை  உங்களுக்கு தெரிவிக்க ஒரு ஸ்பீக்கரும்,  மற்றும் அக்கண்ணாடியுடன் ‘நேரம் என்ன?’ என்பதைத் தெரிவிப்பதற்கு  ஒரு மைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

இக்கண்ணாடியை இயக்குவதற்கு ராஸ்ப் பெர்ரி 5 எனும் மைக்ரோ ப்ராஸஸர், ஜி.எஸ்.எம். மாடியுல் உபயோகப்படுத்தியுள்ளோம். ஜி.எஸ்.எம். மாடியுலில் உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். இதன் மூலம் இந்தக் கண்ணாடியைப் பார்த்து காலையில் பல் தேய்க்கும் நேரத்திலேயே அன்றைய உங்கள் செல்போன் பதிவுகளைக் கண்ணாடித் திரையிலேயே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” என்றனர். மாணவர்க்ளின் படைப்புகள் அனைவரையும் வியக்கவைக்கின்றன. அவர்களின் முயற்சி மேலோங்க நாமும்  வாழ்த்துவோம்!

Tuesday, 13 December 2016

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கடந்தாண்டை விட கூடுதல்!


தமிழகத்தில் அரசு தேர்வுத் துறை இயக்ககம்சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுபொதுத் தேர்வு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுகடலுார்மாவட்டமானது கடலுார் மற்றும் விருத்தாசலம்எனஇரண்டு கல்வி மாவட்டங்களைஉள்ளடக்கியதாகும்
Image result for 12thகடலுார் மாவட்டத்தில் 202 அரசுஅரசு உதவிபெறும்மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 31 ஆயிரத்து525 மாணவமாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வுஎழுத உள்ளனர்இது கடந்தாண்டைக் காட்டிலும் 1,626 மாணவமாணவியர்கள் கூடுதலாகும்.
தேர்வு எழுத வசதியாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 54 மையங்களும்விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்29 மையங்களும் எனமொத்தம் மாவட்டத்தில் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கடலுார் கல்வி மாவட்டத்தில் 252 பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 893 பேரும்விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 158 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 377 பேரும் என மொத்தம்மாவட்டத்தில் 37 ஆயிரத்து 270 பேர் எழுதுகின்றனர்இவர்களின் பெயர்பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள்ஆன் லைனில் பதிவேற்றும் பணி நேற்று முடிந்தது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 அரசுபொதுத் தேர்வு துவங்க உள்ளதுகடந்தாண்டு தேர்ச்சியை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தைஉயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனகுறிப்பாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவமாணவியருக்கு அரையாண்டு தேர்வு காலையில் முடிந்தவுடன் மதியம் அடுத்த நாள்தேர்வுக்குரிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்
இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரவழைத்து அடுத்த தேர்வுக்குரியபாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.